- ஸ்ரீ அரவிந்தோ மெட்ரிகுலேஷன் பள்ளி
- திருவள்ளூர்
- ஸ்ரீ அரவிந்தர்
- பதின்முறை
- பள்ளி
- டன்லப் நகர்
- 89-வேப்பம்பட்டு
- திருவள்ளூர் யூனியன்
- வினோத்
- பள்ளி தலைமை
- பிரபா இயேசு
- நிர்வாக அதிகாரி
- புஷ்பவல்லி
திருவள்ளூர்: திருவள்ளுர் ஒன்றியம், 89-வேப்பம்பட்டு, டன்லப் நகரில் உள்ள ஸ்ரீ அரவிந்தர் மெட்ரிக் பள்ளியில் 30வது ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு பள்ளியின் தாளாளர் வினோத் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் பிரபா ஜீஸஸ், நிர்வாக அதிகாரி புஷ்பவள்ளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி நிறுவனர் சிந்தை ஜெயராமன், தொடர்ந்து 20 வருடங்களாக 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி வழங்கி வரும் ஆசிரியர்களை பாராட்டினார். இந்த விழாவில் பெருமாள்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலைய உதவி அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுபஸ்ரீ என்ற நந்தினி, மாவட்ட சுகாதார அலுவலக தொழில்நுட்ப நேர்முக உதவியாளர் மோகன் ஆகியோர் தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் சந்தோஷ் (கிளித் தட்டு), ஜோசிகா மல்கோத்ரா (கைப் பந்து) ஆகியோருக்கு ரொக்கப் பரிசு வழங்கினர். மேலும் தமன்னா (குண்டு எறிதல்), ஹர்சினி (ஓட்டப்பந்தயம்) ஆகியோருக்கும், சிறந்த மாணவர்களுக்கும் பரிசுகளையும், பதக்கங்களையும் வழங்கி பாராட்டினர். மேலும் இதில் வெள்ளியூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மோகன், சுகாதார ஆய்வாளர் வேலன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி பேசினர்.
The post ஸ்ரீ அரவிந்தர் மெட்ரிக் பள்ளியில் 30வது ஆண்டு விழா appeared first on Dinakaran.
