×

ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் பள்ளியில் விளையாட்டு தின விழா

திருவள்ளூர்: திருவள்ளூர் ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையர்களின் 19ம் ஆண்டு விளையாட்டு தின விழா நடந்தது. இந்த விழாவிற்கு பள்ளி தாளாளர் விஷ்ணு சரண் தலைமை தாங்கினார். முதன்மைச் செயல் அலுவலர் பரணிதரன், பள்ளி முதல்வர் ஸ்டெல்லா ஜோசப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் சரண்யா வரவேற்றார். இந்த விழாவில்  நிகேதன் பள்ளியின் முன்னாள் மாணவரும், தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளருமான கோகுல் பிரசாத், தமிழ்நாடு கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளர் மதிவாணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், பதக்கங்கள் வழங்கினர்.

அப்போது வேகப்பந்து வீச்சாளர் கோகுல்பிரசாத் பேசுகையில், வெற்றி தோல்வி என்பது இயல்பு. தோல்வியைக் கண்டு துவண்டு விடக்கூடாது, வெற்றியைக் கண்டு மமதை கொள்ளக்கூடாது. எனது வளர்ச்சிக்கு முழுமையான காரணம் ஸ்ரீ நிகேதன் பள்ளி. நான் இப்பள்ளியின் முன்னாள் மாணவர் என்பதில் பெருமை கொள்கிறேன் என்றார். சுழல் பந்துவீச்சாளர் மதிவாணன் பேசுகையில், வரும் காலத்தில் இந்திய கிரிக்கெட் அணிக்காக இந்த பள்ளியிலிருந்து பல்வேறு மாணவர்கள் தகுதி ஆவார்கள் என பெருமையாக பேசினார். முடிவில் பள்ளியின் விளையாட்டுத்துறை தலைவர் ரகு நன்றி கூறினார்.

The post ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் பள்ளியில் விளையாட்டு தின விழா appeared first on Dinakaran.

Tags : Day ,Sri Nikethan ,Matriculation ,School ,Tiruvallur ,Sports Day ,Sri Nikethan Matriculation Higher Secondary School ,Vishnu Saran ,Chief Executive Officer ,Paranitharan ,Principal ,Stella Joseph… ,Sri Nikethan Matriculation School ,Dinakaran ,
× RELATED திருநின்றவூர் நகராட்சியில் காலி...