×

கெஜ்ரிவால் முதல்வராக இருந்த போது புதுப்பித்த ஆடம்பர மாளிகையில் பாஜ முதல்வர் தங்க மாட்டார்: கட்சி வட்டாரங்கள் தகவல்

புதுடெல்லி: டெல்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் ஆட்சியில் இருந்த போது ஆடம்பரமாக புதுப்பிக்கப்பட்ட அரசு இல்லத்தில் பாஜக முதல்வர் தங்க மாட்டார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜ கட்சி 48 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளது. 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி தோல்வியடைந்தது. புது டெல்லி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பாஜ தலைவர் பர்வேஷ் வர்மாவிடம் தோல்வியடைந்தார்.

சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஆம் ஆத்மி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை பாஜக சுமத்தியது. குறிப்பாக முதல்வர் வசிக்கும் அரசு இல்லத்தை ஆடம்பர மாளிகையாக கெஜ்ரிவால் மாற்றியுள்ளார். கட்டிடத்தை புதுப்பிப்பதற்கு ரூ.75 முதல் ரூ.80 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில் பல முறைகேடுகள் நடந்துள்ளதாக பாஜக குற்றம் சாட்டியது. பிரதமர் மோடி பிரான்ஸ், அமெரிக்க நாடுகளில் பயணம் மேற்கொண்டு விட்டு நாடு திரும்பிய பின்னர் பாஜகவின் புதிய முதல்வரை அந்த கட்சி அறிவிக்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் பாஜக முதல்வர் ஆடம்பர மாளிகையில் தங்க மாட்டார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் இது தொடர்பாக மாநில பாஜக தலைவர் விரேந்திர சச்சதேவா டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவுக்கு கடிதம் எழுதியுள்ளார் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

The post கெஜ்ரிவால் முதல்வராக இருந்த போது புதுப்பித்த ஆடம்பர மாளிகையில் பாஜ முதல்வர் தங்க மாட்டார்: கட்சி வட்டாரங்கள் தகவல் appeared first on Dinakaran.

Tags : BJP ,chief minister ,Kejriwal ,Party ,New Delhi ,Delhi ,BJP party ,Delhi assembly elections.… ,Dinakaran ,
× RELATED ‘முருகன்’ தொகுதி அலறும் ‘நாட்டாமை’