டெல்லி: யுஜிசி புதிய வரைவு விதிகள் அரசியல் சட்டத்துக்கும் கூட்டாட்சி தத்துவத்துக்கும் விரோதமானவை என மக்களவையில் திரிணாமுல் காங். எம்.பி மகுவா மொய்த்ரா கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது, 2025-ம் ஆண்டின் யுஜிசி வரைவு விதிகளுக்கு எதிர்ப்பு. 2018-யுஜிசி விதிகளுக்கு மாற்றாக ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய வரைவு விதிகளுக்கு எதிர்ப்பு. ஒன்றிய அரசின் கைகளில் அதிகாரத்தை குவிக்க யுஜிசி புதிய வரைவு விதிகள் வழிவகுப்பதாக மகுவா மொய்த்ரா கண்டனம் தெரிவித்தார்.
யுஜிசி புதிய வரைவு விதிகள் அரசியல் சட்டத்துக்கும் கூட்டாட்சி தத்துவத்துக்கும் விரோதமானவை. ஒன்றிய அரசு வெளியிட்டுள்ள புதிய யுஜிசி வரைவு விதிகளை உடனே திரும்ப பெறவும் வலியுறுத்தினார். புதிய வரைவு விதிகளில் துணைவேந்தர் நியமனம் தொடர்பான தேடுதல் குழு அமைக்கும் நடைமுறையை மாற்ற முயற்சிக்கின்றனர். துணைவேந்தர் தேடுதல் குழுவில் மாநில அரசின் பிரதிநிதிக்கு புதிய யுஜிசி வரைவு விதிகள் இடமளிக்கவில்லை என தெரிவித்தார்.
The post யுஜிசி புதிய வரைவு விதிகள் அரசியல் சட்டத்துக்கும் கூட்டாட்சி தத்துவத்துக்கும் விரோதமானவை: மகுவா மொய்த்ரா காட்டம் appeared first on Dinakaran.
