×

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் மோதல்: 14 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மற்றும் பிஜப்பூர் மாவட்டங்களில் இன்று காலை பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி வேட்டையில் 14 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். சுக்மாவில் நடைபெற்ற மோதலில் 12 பேரும், பிஜப்பூரில் நடைபெற்ற மோதலில் இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஒன்றிய அரசின் இலக்கான “2026 மார்ச் மாதத்திற்குள் நக்ஸல் அற்ற இந்தியா” என்ற திட்டத்தின் கீழ், கடந்த மூன்று மாதங்களாகப் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, இன்று அதிகாலை சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தின் கோட்டா கிஷ்டாராம் வனப்பகுதியில் மாவட்ட ரிசர்வ் படை மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்குப் பாதுகாப்புப் படையினர் அளித்த அதிரடி பதிலடியில், 14 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுக்மாவில் நடைபெற்ற மோதலில் 12 பேரும், பிஜப்பூரில் நடைபெற்ற மோதலில் இருவரும் சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சம்பவ இடத்திலிருந்து உயிரிழந்தவர்களின் உடல்களுடன் ஏகே-47 உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இந்தப் பகுதியில் இன்னும் சில இடங்களில் துப்பாக்கிச் சண்டை நீடித்து வருவதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே எஞ்சியிருக்கும் இந்த நக்ஸல் ஆதிக்கம், இன்னும் இரண்டு மாதங்களில் முழுமையாக ஒழிக்கப்படும் எனப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Tags : CHHATTISGARH ,MAOISTS ,Raipur ,Sukma ,Bijapur ,Union ,
× RELATED பள்ளிகளில் மராத்தி மொழி பாடம்...