×

இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சு பன்மடங்கு அதிகரிப்பு : பிரதமர் மோடி 63 முறை வெளிப்படுத்தியதாக அமெரிக்க அமைப்பு ஆய்வறிக்கை!!

டெல்லி : நாட்டில் மத சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சில் கடந்த ஓர் ஆண்டில் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மத்திய பாஜக ஆட்சியில் சிறுபான்மை மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாகவும் அவர்கள் அச்சறுத்தல்படுவதாகவும் தொடர்ந்து, குற்றச் சாட்டுகள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் வெறுப்பு பேச்சு என்பது ஆளும் பாஜக மற்றும் இந்து தேசியவாத இயக்கங்களின் கொள்கை, சித்தாந்தங்களின் பின்னிப் பிணைந்துள்ளதாக இந்தியா ஹெட் லாப் எனப்படும் அமெரிக்க அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் தேர்தல் நேரத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக அதிகளவில் வெறுப்பு பேச்சுகள் முன்வைக்கப்பட்டதாகவும் 2023ம் ஆண்டில் இது 233 சம்பவங்கள் என்ற நிலையை கடந்து 2024ல் 1,165 ஆக அதிகரித்துள்ளது என்றும் ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.

பிரதமர் மோடி 63 முறை வெறுப்புணர்வு கருத்துக்களை வெளிப்படுத்தியதாகவும் பாஜக தலைவர்களால் 450 வெறுப்புப் பேச்சுகள் பரப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், இந்துக்களின் சொத்துக்களை பறித்து இஸ்லாமியர்களிடம் வழங்கி விடுவார்கள் என்ற பிரதமர் மோடியின் பேச்சும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. மேலும் இஸ்லாமிய மக்களை ஊடுருவல்காரர்கள் என்றும் பிரதமர் விமர்சித்து இருந்ததும் தேர்தலில் இந்துக்களின் வாக்குகளை பெற சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு ஒரு யுக்தியாக பயன்படுத்தப்படுவதாகவும் அந்த அமைப்பு தனது ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோவில் பாணியில் சர்ச்சைக்குரிய இதர வழிபாட்டு தலங்களையும் கைப்பற்ற வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்படுத்தாகவும் அந்த நிறுவனம் சுட்டிக் காட்டி உள்ளது. இந்தியாவில் உள்ள 22 கோடி இஸ்லாமிய மக்கல் தங்கள் எதிர்காலம் குறித்து கவலை கொண்டு இருப்பதாகவும் அந்த அமைப்பு தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

The post இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சு பன்மடங்கு அதிகரிப்பு : பிரதமர் மோடி 63 முறை வெளிப்படுத்தியதாக அமெரிக்க அமைப்பு ஆய்வறிக்கை!! appeared first on Dinakaran.

Tags : US ,Modi ,Delhi ,central ,BJP government… ,Dinakaran ,
× RELATED மரபணு பரிசோதனைகளை (Genetic Testing) மலிவு...