நாகர்கோவில், பிப்.11: தை மாதம் பவுர்ணமியும், பூச நட்சத்திரமும் இணைந்து வரும் நாள் தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது. முருக கடவுளுக்கு விரதம் இருந்து பக்தர்கள் வழிபடும் முக்கிய நாள் இது ஆகும். அந்த வகையில் தைப்பூச திருநாள் இன்று (11ம் தேதி) முருகன் கோயில்களில் கொண்டாடப்படுகிறது. கன்னியாகுமரி அருகேயுள்ள பழத்தோட்டம் முருகன்குன்றம் வேல்முருகன் கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம் 10 நாட்கள் தைப்பூச திருநாள் நடைபெறும். இன்று தைப்பூச திருநாளன்று மாலை உற்சவமூர்த்தி கிரிவலம், இரவு கார்த்திகை பொய்கை குளத்தில் சுவாமிக்கு தீர்த்தவாரி ஆராட்டு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. வெள்ளிமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், வேளிமலை குமாரகோயில், மருங்கூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், பத்மநாபபுரம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளிட்ட முருகன் கோயில்களில் தைப்பூச திருநாளையொட்டி சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறுகிறது.
The post இன்று தைப்பூச திருநாள் குமரி முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை appeared first on Dinakaran.
