×

தக்கலையில் மதுவிற்ற 3 பேர் கைது

 

தக்கலை : தக்கலை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் பள்ளியாடி, திருவிதாங்கோடு பகுதிகளில் ரோந்து சென்றார். அப்போது அப்பகுதியில் அரசு மதுபாட்டில்களை வாங்கி பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து பள்ளியாடியில் மதுவிற்பனை செய்ய முயன்ற பழையகடை ஆர்.சி காலனியை சேர்ந்த சுரேஷ்குமாரிடம் இருந்து 3 பாட்டில்களும், நேசர்புரத்தை சேர்ந்த மரியதாஸ் என்பவரிடம் இருந்து 4 பாட்டில்களும் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர். இது போன்று திருவிதாங்கோடு பகுதியில் விற்பனை செய்ய முயன்ற கொட்டாரத்துவிளையை சேர்ந்த சரவணகுமார் என்பவரிடம் இருந்து 30 பாட்டில்கள் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

The post தக்கலையில் மதுவிற்ற 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Thakkalai ,Sub ,Inspector ,Stephen ,Palliyadi ,Thiruvithangodu ,Palliyadi, RC… ,
× RELATED ஆத்தூர் போலீசில் காதல் ஜோடி தஞ்சம்