×

இபிஎஸ் பாராட்டு விழாவை புறக்கணித்த செங்கோட்டையன்

அன்னூர்: கோவை மாவட்டம், அன்னூர் அருகே கஞ்சப்பள்ளியில் அவிநாசி-அத்திக்கடவு திட்ட கூட்டமைப்பு மற்றும் விவசாயிகள் சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நேற்று நடந்தது. திட்டத்தை துவக்கி நிதி ஒதுக்கியதற்காக விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது அரசியல் கலப்பில்லாமல் அத்திக்கடவு கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் விழாவில் எடப்பாடி பழனிசாமி பெரும்பாலான நேரம் அரசியல் பேசினார்.

இதனால் விழாவில் இருந்த பலர், எடப்பாடி பழனிசாமி பேசும்போதே வெளியேறினர். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவரும், அதிமுக மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் பாராட்டு விழா மாநாட்டுக்கு வராதது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர் கட்சி தலைமை மீது அதிருப்தியில் உள்ளதாக கூறப்படும் நிலையில் எடப்பாடிக்கு நடந்த பாராட்டு விழாவில் பங்கேற்காதது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

The post இபிஎஸ் பாராட்டு விழாவை புறக்கணித்த செங்கோட்டையன் appeared first on Dinakaran.

Tags : Sengkottayan ,EPS Appreciation Ceremony ,ANNUR ,ADAPPADI PALANISAMI ,FORMER CHIEF MINISTER ,AVINASI-ATTIKADAVU PROJECT FEDERATION AND FARMERS ,KANCHAPALLI NEAR KOWAI DISTRICT ,Dinakaran ,
× RELATED எடப்பாடி சூழ்ச்சியில் சிக்கி தவிப்பு;...