×

அரியக்குடி அற்புத குழந்தை இயேசு ஆலய விழா

காரைக்குடி, பிப். 8: காரைக்குடி அருகே அரியக்குடி வளன்நகர் பங்கு, அற்புத குழந்தை இயேசு ஆலயத்தில் குழந்தை இயேசு பங்கு கூடம் திறப்பு விழா நடந்தது. வளன்நகர் பங்குத்தந்தை அருள்பணி, அருள்ஆனந்த் வரவேற்றார். சிவகங்கை மறைமாவட்ட ஆயர் மேதகு லூர்து ஆனந்தம் புனிதம் செய்து திறந்து வைத்தார். சிறப்பு திருப்பலி நடந்தது. மறைமாவட்ட முதன்மை குரு, முன்னாள் பங்குத்தந்தை அருட்பணி, சகாயஜோசப் உள்பட மறைமாவட்ட ஆயர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் சவரிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பங்குக்கூடம் கட்ட உதவி நன்கொடையாளர்கள் கவுரவிக்கப்பட்டனர். திரளான பங்கு மக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வளன்நகர் பங்குத்தந்தை மற்றும் பங்குப் பேரவையினர் செய்திருந்தனர்.

The post அரியக்குடி அற்புத குழந்தை இயேசு ஆலய விழா appeared first on Dinakaran.

Tags : Ariyakudi Miraculous Child Jesus Church Festival ,Karaikudi ,Infant Jesus Church Hall ,Ariyakudi ,Valannagar ,Miraculous Child Jesus Church ,Arul Anand ,Lourdes Anand ,Bishop ,Sivaganga Diocese… ,Dinakaran ,
× RELATED ஆத்தூர் போலீசில் காதல் ஜோடி தஞ்சம்