×

போக்சோ வழக்கை ரத்து செய்யக்கோரிய எடியூரப்பா மனு நிராகரிப்பு: முன்ஜாமீன் வழங்கி ஐகோர்ட் உத்தரவு

பெங்களூரு: போக்சோ வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் முதல்வர் எடியூரப்பா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், வழக்கில் அவரை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. பெங்களூருவை சேர்ந்த மமதாசிங் (கடந்தாண்டு உடல்நல குறைவால் காலமானார்), கடந்தாண்டு புகார் மனு போலீசில் புகார் மனு கொடுத்தார். அதில் தனது மகளுக்கு முன்னாள் முதல்வர் பி. எஸ். எடியூரப்பா பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். அதையேற்று எடியூரப்பா மீது போக்சோ பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கு சிஐடி போலீசாரிடம் மாநில அரசு ஒப்படைத்தது. இந்நிலையில் தனக்கு எதிராக தொடரப்பட்டுள்ள போக்சோ வழக்கை ரத்து செய்யக்கோரி எடியூரப்பா சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில் நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் போக்சோ வழக்கை ரத்து செய்யகோரி எடியூரப்பா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் இவ்வழக்கில் எடியூரப்பாவை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் வழங்கியதுடன் வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதனால் எடியூரப்பாவுக்கு சற்று நிம்மதி கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

The post போக்சோ வழக்கை ரத்து செய்யக்கோரிய எடியூரப்பா மனு நிராகரிப்பு: முன்ஜாமீன் வழங்கி ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Yediyurappa ,POCSO ,HC ,Bengaluru ,Chief Minister ,Mamata Singh ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்பக் கோளாறால் உலகம்...