×

பிப்.21ம் தேதி தாய்மொழி தினத்தையொட்டி அரசு அலுவலகங்களில் உறுதி மொழி ஏற்க வேண்டும்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தாய்மொழிகளின் அவசியத்தையும் அதன் சிறப்புகளையும் மக்களுக்கு எடுத்துரைக்க பிப்ரவரி 21ம் தேதி சர்வதேச தாய்மொழி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 1999ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதியை உலகத் தாய்மொழி தினமாக கொண்டாட, யுனெஸ்கோ அமைப்பினால் நடத்தப்பட்ட பொதுமாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து, 2000ம் ஆண்டு முதல் உலக தாய்மொழிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்தாண்டுக்கான தாய்மொழி தினத்தை வரும் 21ம் தேதி கொண்டாடும் விதமாக அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தாய்மொழி தின உறுதி மொழியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

The post பிப்.21ம் தேதி தாய்மொழி தினத்தையொட்டி அரசு அலுவலகங்களில் உறுதி மொழி ஏற்க வேண்டும்: தமிழக அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Mother Language Day ,Tamil ,Nadu ,Chennai ,International Mother Language Day ,UNESCO ,International Mother Language Day… ,Tamil Nadu ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...