×

இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனங்களில் ேதசிய அளவில் முதலிடம் பிடித்து தங்கம் வென்ற மாணவி

நாகப்பட்டினம்,பிப்.7: இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனங்களில் தேசிய அளவில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் பெற்ற மாணவியை நாகப்பட்டினம் கலெக்டர் ஆகாஷ் பாராட்டினார். நாகப்பட்டினம் பஞ்சநதிக்குளம் கிழக்கு கிராமத்தை சேர்ந்தவர். இளையராஜா. இவரது மனைவி பூமகள். இவரது மகள் மதி. இவர் சேலத்தில் செயல்பட்டு வரும் (ஐ.ஐ.எச்.டி.) இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனத்தில் படித்து வருகிறார். தேசிய அளவில் இதுபோன்று 10 இடங்களில் செயல்பட்டு வரும் நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களின் தேர்ச்சியில் மதி முதலிடம் பெற்றார்.

இதையடுத்து மேற்குவங்க மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒன்றிய கைத்தறி துறை சார்பில் நடந்த விழாவில் ஒன்றிய அமைச்சர் கிரிராஜ்சிங் மாணவி மதிக்கு தங்கப்பதக்கம் வழங்கினார். அந்த பதக்கத்துடன் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்திற்கு தனது பெற்றோருடன் மாணவி மதி வந்தார். கலெக்டர் ஆகாஷை மாணவி மற்றும் அவரது பெற்றோர் சந்தித்து சான்றிதழ்களை காண்பித்தனர். அதை பார்த்து மாணவியை கலெக்டர் ஆகாஷ் பாராட்டினார்.

The post இந்திய கைத்தறி தொழில்நுட்ப நிறுவனங்களில் ேதசிய அளவில் முதலிடம் பிடித்து தங்கம் வென்ற மாணவி appeared first on Dinakaran.

Tags : Indian Handloom Technology Institutes ,Nagapattinam ,Collector ,Akash ,Panchanathikulam East ,Ilayaraja ,Poomagal ,Mathi ,
× RELATED 9 சட்டமன்ற தொகுதியிலும் 20, 21ம் தேதிகளில்...