×

பெரம்பலூரில் அமைக்கப்பட்டுள்ள நாராயணசாமி நாயுடு சிலையை இடமாற்றம் செய்யக் கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: நாராயணசாமி நாயுடுவின் பெருமைகள் நினைவு கூறப்பட வேண்டிய இந்த காலக்கட்டத்தில் பெரம்பலூர் பேருந்து நிலையம் அருகில் அமைக்கப்பட்டிருக்கும் அவரது திருவுருவச் சிலையை இடமாற்றம் செய்ய பெரம்பலூர் நகராட்சி முடிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

அவருக்கு 2019ம் ஆண்டு இதே நாளில் கோவை மாவட்டம், வையம்பாளையத்தில் தமிழக அரசின் சார்பில் மணிமண்டபம் அமைக்கப்பட்டது. நாராயணசாமி நாயுடுவின் புகழை மேலும் மேலும் பரப்ப வேண்டிய காலத்தில் அவரது சிலையை அகற்றி வேறிடத்தில் வைக்க முயல்வது நியாயமல்ல. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post பெரம்பலூரில் அமைக்கப்பட்டுள்ள நாராயணசாமி நாயுடு சிலையை இடமாற்றம் செய்யக் கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Narayanasamy Naidu ,Perambalur ,Ramadoss ,Chennai ,PMK ,Perambalur Municipality ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது