×

சென்னை ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் இந்திய வீரர்கள்

சென்னை: ஏடிபி சேலஞ்சர் டூர் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டங்களும், இரட்டையர் பிரிவில் காலிறுதி ஆட்டங்களும் நடந்தன. ஒற்றையர் பிரிவில் கஜகஸ்தானின் டிமோஃபேய் ஸ்கதோவ், ரஷ்யாவின் வீரர் அஸ்லான் காரட்சேவ் ஆகியோர் மோதினர். அதில் டிமோபேய் 6-4, 7-5 என நேர் செட்களில் கடுமையாக போராடி வென்று காலிறுதிக்கு முதல் வீரராக நுழைந்தார். இந்த ஆட்டம் 2மணி நேரம் நீண்டது. இதேபோல், பில்லி ஹர்ரிஸ்(கிரேட் பிரிட்டன்), ஷின்த்ரோ மோசிசுகி(ஜப்பான்), ஒலெகாந்தர் ஒவசரான்கோ(உக்ரைன்) ஆகியோரும் நேற்று காலிறுதிக்கு முன்னேறினர்.

இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டங்களிலும் இந்திய வீரர்கள் நேற்று ஆதிக்கம் செலுத்தினர். காலிறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியன்களான ராம்குமார் ராமநாதன்/சாகேத் மைனேனி ஆகியோர் 6-3, 6-4 என நேர் செட்களில் ரஷ்யாவின் ஈகோர் அகபோனோவ்/ஈவஜெனி டியூர்னேவ் இணையை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது. அதேபோல் மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்/ விஜய் சுந்தர் பிரசாந்த் இணை, கர்ட்னி ஜான் லாக்(ஜிம்பாப்வே)/ரியோ நாகுச்சி(ஜப்பான்) இணையுடன் மோதியது.

ஒரு மணி 3 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தில் 6-2, 6-2 என நேர் செட்களில் வென்ற இந்திய இணை அரையிறுதிக்கு தகுதிப் பெற்றது. இந்திய இணையான சித்தாந்த் பான்டியா/பரிகாகித் சோமானி இணை மட்டும் ரோ ஹோ(சீன தைபே)/மேத்யூ கிறிஸ்டோபர்(ஆஸ்திரேலியா) இணையிடம் 7-6(7-3), 7-6(7-3) என நேர் செட்களில் டை பிரேக்கர் வரை போராடி தோல்வியை சந்தித்தது. இந்த தொடரில் இரட்டையர் பிரிவில் பங்கேற்ற இணைகளில் ரோ ஹோ/மேத்யூ கிறிஸ்டோபர் இணைதான் நெம்பர் ஒன் இணையாகும்.

The post சென்னை ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் இந்திய வீரர்கள் appeared first on Dinakaran.

Tags : Chennai Open ,Chennai ,ATP Challenger Tour Chennai Open ,Kazakhstan ,Timofey Skatov ,Russia ,Aslan Karatsev… ,Dinakaran ,
× RELATED இலங்கையுடன் இன்று 4வது டி.20 போட்டி:...