×

சிட்ரபாக்கம் பகுதியில் சேதமடைந்த கிருஷ்ணா கால்வாயை சீரமைக்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

ஊத்துக்கோட்டை, பிப்.6: ஊத்துக்கோட்டை அருகே, சிட்ரபாக்கம் பகுதியில் சேதமடைந்திருக்கும் கிருஷ்ணா கால்வாயை விரைந்து சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆந்திர-தமிழக நதிநீர் ஒப்பந்தப்படி, ஆந்திர அரசு தமிழகத்திற்கு ஆண்டுதோறும் ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி தண்ணீரும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி தண்ணீரும், 3 டி.எம்.சி சேதாரம் என மொத்தம் 15 டி.எம்.சி தண்ணீர் தரவேண்டும். இந்நிலையில், கடந்த வருடம், ஊத்துக்கோட்டை அருகே தாமரைக்குப்பம் முதல் ஜீரோ பாயிண்ட் வரை கிருஷ்ணா கால்வாய் சேதமடைந்து காணப்பட்டது. இதனையடுத்து, ஜீரோ பாயிண்ட் முதல் ஆலப்பாக்கம் வரை கால்வாயை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

அதன்பேரில், கடந்த வருடம் ஜீரோ பாயிண்டின் 4வது கிலோ மீட்டரில் இருந்து ஆலப்பாக்கம் வரை சேதமடைந்த கால்வாய் ₹24 கோடி செலவில் சீரமைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த வருடம் நவம்பர், டிசம்பர் மாதம் பெய்த பெஞ்சல் புயல், மழை காரணமாக கால்வாய் நிரம்பி தண்ணீர் சென்றது. இதனால், ஊத்துக்கோட்டை அருகே, சிட்ரபாக்கம் கிருஷ்ணா கால்வாய் மதகு அருகில் சேதமடைந்தது. இந்நிலையில், நீர்வரத்து அதிகமானால் கால்வாய் மீண்டும் சேதமடைய வாய்ப்புள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் தலையிட்டு சேதமடைந்த கால்வாயை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post சிட்ரபாக்கம் பகுதியில் சேதமடைந்த கிருஷ்ணா கால்வாயை சீரமைக்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Krishna canal ,Chitrapakkam ,Uthukottai ,Andhra Pradesh government ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்த வடமாநிலத்தவர் பரிதாப பலி