×

அண்ணாமலையும் எச்.ராஜாவும் வட மாநிலங்களை போல தமிழ்நாட்டிலும் பிரச்னையை உருவாக்க நினைக்கின்றனர்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி

சென்னை: சென்னை ஓட்டேரி படவேட்டம்மன் கோயிலில் நடந்து வரும் திருப்பணிகளை நேற்று காலை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, சென்னை மாநகர மேயர் பிரியா, மண்டல குழு தலைவர் சரிதா மகேஷ் குமார், அரசு அதிகாரிகள் உடனிருந்தனர். தொடர்ந்து, அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: திருப்பரங்குன்றம் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இந்து அமைப்பினர் அல்ல. பாஜவினர். அது தேவையற்ற போராட்டம். அந்த பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள், இந்துக்களே இதை தேவையற்ற ஒரு பிரச்னை என்று கூறியிருக்கிறார்கள். திருப்பரங்குன்றத்தில் இஸ்லாமியர்களும் இந்துக்களும் மாமன் மச்சானாக சகோதரத்துவம் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.அண்ணாமலை மற்றும் எச்.ராஜாவிற்கு ஒன்று சொல்லிக் கொள்கிறோம். எங்கள் முதல்வர் எங்களை அமைதியாக இருக்க அறிவுறுத்தி இருக்கிறார். வடமாநிலத்தை போன்று கலவரத்தை ஏற்படுத்த நினைக்கிறீர்கள். எங்கள் முதல்வர் எங்கு கலவரம் ஏற்பட்டாலும் இரும்புக்கரம் கொண்டு அடக்க தயாராக இருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

The post அண்ணாமலையும் எச்.ராஜாவும் வட மாநிலங்களை போல தமிழ்நாட்டிலும் பிரச்னையை உருவாக்க நினைக்கின்றனர்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Annamalai ,H. Raja ,Tamil Nadu ,Minister ,P.K. Sekarbabu ,Chennai ,Hindu ,Endowments ,Otteri Patavettamman Temple ,Metropolitan Mayor ,Priya ,Regional Committee ,President ,Saritha Mahesh Kumar ,
× RELATED எடப்பாடி சூழ்ச்சியில் சிக்கி தவிப்பு;...