×

இனி என்ன சொல்லப் போகிறார் ஆளுநர் ரவி : அமைச்சர் ரகுபதி பேட்டி

சென்னை: மாநில அரசுக்கு கட்டுப்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும் என்ற உண்மையை பிரதமர் மோடியே ஒப்புக்கொள்கிறார் என்று அமைச்சர் ரகுபதி பேட்டி அளித்துள்ளார். இனி என்ன சொல்லப் போகிறார் ஆளுநர் ரவி. பாஜக ஆளாத மாநிலங்களின் சட்டமன்ற மரபுகளை ஆளுநர்கள் எவ்வாறு சிதைக்கின்றனர் என்பது பிரதமர் மோடிக்கு தெரியாதா? தமிழ்நாட்டில் மோடி நியமித்திருக்கும் ஆளுநர் ரவியோ, தமிழ்நாடு அரசின் உரையை வாசிப்பது கூட இல்லை. நாகரிகம் கருதி மதிப்பளித்து அவையில் உரையாற்ற சபாநாயகர் மூலம் முதல்வர் அழைப்பு விடுத்தார். ஆனால் நாகரிகம் என்றால் கிலோ எத்தனை ரூபாய் என கேட்கும் அளவு ஆளுநர் ரவி நடந்து கொள்கிறார்.

 

The post இனி என்ன சொல்லப் போகிறார் ஆளுநர் ரவி : அமைச்சர் ரகுபதி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Governor ,Ravi ,Minister ,Raghupathi ,Chennai ,Modi ,Governors ,BJP… ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...