×

சவுதி அரேபியாவில் மருத்துவராக பணியாற்ற விண்ணப்பிக்கலாம்

சென்னை: சவுதி அரேபியாவில் மருத்துவராக பணியாற்ற விண்ணப்பிக்கலாம் என அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. சவுதி அரேபிய அமைச்சகத்தில் உள்ள மருத்துவ பணிக்கு முதுகலை பட்டம் பெற்ற மருத்துவர்கள் 55 வயதிற்கு மிகாமல், 3 வருட பணி அனுபவத்துடன் தேவைப்படுகிறார்கள். இவர்களுக்கான நேர்காணல் வருகிற 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை பெங்களூரில் உள்ள ‘தி லீலா பேலஸ்’ ஓட்டலில் நடைபெற உள்ளது.

இந்த பணியாளர்களுக்கு உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை அந்நாட்டின் வேலை அளிப்பவரால் வழங்கப்படும். இந்நிறுவனம் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான காலி பணியிடங்கள் குறித்த விவரங்களை இந் நிறுவன வலைத்தளமான www.omcmanpower.tn.gov.in-ல் காணலாம்.

மேலும் இதுகுறித்த விவரங்களை இந்நிறுவனத்தின் வாட்ஸ்அப் எண் 6379179200 மற்றும் தொலைபேசி எண்களில் (044-22505886, 044-22502267) தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்திற்கு எந்த ஒரு இடைத்தரகரோ, ஏஜெண்ட்டுகளோ கிடையாது. விண்ணப்பதாரர்கள் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில்தான் நேரிடையாக பதிவு செய்ய வேண்டும் என அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

The post சவுதி அரேபியாவில் மருத்துவராக பணியாற்ற விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Saudi Arabia ,Chennai ,Foreign Employment Agency ,Saudi Arabian Ministry ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை...