- சுமித் நாகல்
- ரொசாரியோ
- ரொசாரியோ சேலஞ்சர்
- அர்ஜென்டீனா
- ரொசாரியோ, அர்ஜென்டினா
- ரொசாரியோ டென்னிஸ்
- தின மலர்
ரொசாரியோ: அர்ஜென்டினாவில் நடந்து வரும் ரொசாரியோ சாலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர் சுமித் நாகல் அபாரமாக வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். அர்ஜென்டினாவின் ரொசாரியோ நகரில் ரொசாரியோ சாலஞ்சர் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த போட்டிகளில் இந்திய வீரர் சுமித் நாகல் 8ம் நிலை வீரராக ஆடி வருகிறார். நேற்று நடந்த போட்டியில் அர்ஜென்டினா வீரர் ரென்ஸோ ஓலிவோவுடன் மோதினார். முதல் செட்டை போராடி இழந்தபோதும் அடுத்த இரு செட்களில் சிறப்பாக ஆடிய சுமித் அவற்றை கைப்பற்றினார். இதன் மூலம், 5-7, 6-1, 6-0 என்ற செட் கணக்கில் வென்ற சுமித் நாகல் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.
The post இந்திய வீரர் சுமித் நாகல் அபார வெற்றி: ரொசாரியோ டென்னிஸ் appeared first on Dinakaran.
