×

ஒரே ஆண்டில் பிசிசிஐ அள்ளியது ரூ.3,358 கோடி

மும்பை: இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வருவாய் ரூ.3,358 கோடி உயர்ந்துள்ளது வரவு செலவு திட்ட வரைவு அறிக்கையில் தெரியவந்துள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 2024 மற்றும் 2025-ம் ஆண்டுகளுக்கான தணிக்கை செய்யப்பட்ட கணக்குகள் மற்றும் 2025-26 நிதியாண்டிற்கான கிரிக்கெட் வாரியத்தின் வரைவு வரவு செலவுத் திட்டத்தை இணை செயலாளர் பிரப்தேஜ் சிங் பாட்டியா சமர்ப்பித்தார்.

இதில் கிரிக்கெட் வாரியத்தின் பொதுநிதி ரூ. 7,988 கோடியில் இருந்து ரூ.11,346 கோடியாக அதிகரித்து உள்ளது. இதன்மூலம் பொது நிதியில் ரூ.3,358 கோடி உயர்ந்து இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்கு முறைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதையடுத்து கிரிக்கெட் வாரியத்தில் டிரீம் 11 தனது ரூ.358 கோடி ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தில் இருந்து விலகியது.

மேலும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் வருவாய் குறைபாடும் இருந்தது. இந்த பற்றாக்குறையை புதிய ஒப்பந்தங்கள் மூலம் கிரிக்கெட் வாரியம் ஈடு செய்தது. 2025-26-ம் நிதியாண்டில் ரூ.8,693 கோடி வருமானத்தை இலக்கு வைத்துள்ளது. வருமானவரிச் செலுத்துதலுக்காக ரூ.3,320 கோடியும், எதிர்பாராத செலவினங்களுக்காக ரூ.1,000 கோடியும், நிலுவை வழக்குச் செலவுகளுக்காக சுமார் ரூ.160 கோடியும் கிரிக்கெட் வாரியம் ஒதுக்கியுள்ளதாக பிரப்தேஜ் சிங் பாட்டியா தெரிவித்தார்.

Tags : BCCI ,Mumbai ,Board of Control for Cricket in India ,
× RELATED இலங்கைக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது இந்திய மகளிர் அணி