×

புஷ்பா 2 படத்தில் பகத் பாசிலின் முக்கிய காட்சியின் படப்பிடிப்பு நிறைவு

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் ‘புஷ்பா-2; த ரூல்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. முக்கியமான கட்டப் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாகவும், அதில் ‘பன்வர் சிங் ஷெகாவத்’ கதாபாத்திரத்தில் நடிக்கும் பகத் பாசில் நிறைவு செய்துள்ளதாகவும், அவர் இந்த முறை அதிகப் பழிவாங்கும் உணர்ச்சியுடன் வந்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்கள்.

அமலாக்கத் துறை, வருமான வரி சோதனை என அப்படத் தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில் கடும் சோதனை நடைபெற்றது. அதனால், படப்பிடிப்பை சில நாட்கள் நிறுத்தி வைத்திருந்தார்கள். அவை நிறைவுற்ற பிறகு ஆரம்பமான படப்பிடிப்பு தற்போது தொடர்ந்து நடந்து வருகிறது. இரண்டாம் பாகம் பற்றி ரசிகர்களிடம் பெரும் எதர்பார்ப்பு எழுந்துள்ளது.

The post புஷ்பா 2 படத்தில் பகத் பாசிலின் முக்கிய காட்சியின் படப்பிடிப்பு நிறைவு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Bhagad Basil ,Alu Arjun ,Rashmika Manthana ,Bhagat Basil ,Sugumar ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா