×

சென்னை ராமாபுரத்தில் சாலையில் கிடந்த ஏகே 47 துப்பாக்கியால் அதிர்ச்சி

சென்னை: சென்னை ராமாபுரத்தில் சாலையில் கிடந்த ஏகே 47 ரக துப்பாக்கி மற்றும் 30 தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மியாட் மருத்துவமனை சிக்னல் அருகே சாலையில் கிடந்த துப்பாக்கி, தோட்டாகளை மீட்பு சிவராஜ் என்பவர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீசார் உடனடியாக அதன் உண்மை தன்மை குறித்து அறிய ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர்.

மருத்துவமனை அருகே துப்பாக்கி மற்றும் குண்டுகளை வீசிச் சென்றது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்த துப்பக்கி மற்றும் தோட்டாக்கள் உண்மையாவையா அல்லது சினிமா படபிடிப்புக்காக கொண்டு செல்லும் போது தவறவிடப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

சென்னை ராமாபுரம் பகுதியில் ஏகே 47 ரக துப்பாக்கி சாலையில் கிடந்து அந்த பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post சென்னை ராமாபுரத்தில் சாலையில் கிடந்த ஏகே 47 துப்பாக்கியால் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Ramapura, Chennai ,Chennai ,Sivraj ,Miad Hospital Signal ,Ramapuram, Chennai ,Dinakaran ,
× RELATED மகளிர் உரிமைத் துறையின் சார்பில்...