ஈரோடு: ஈரோடு கருங்கல்பாளையம் குயிலன் தோப்பு பகுதியில் உள்ள அடர்ந்த வன பகுதியில் தீப்பிடித்து எரிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட கருங்கல்பாளையம் குயிலன்தோப்பு பொன்னுசாமி வீதி அருகே அடர்ந்த வனப் பகுதி உள்ளது. அங்கு குப்பைகள் நிறைந்து காணப்பட்டது.
மேலும், வெயில் காரணமாக மரம், செடிகொடிகள், புற்கள் காய்ந்து காணப்பட்டது. இந்நிலையில், நேற்று மதியம் திடீரென குப்பையில் தீப்பிடித்தது. தகவல் அறிந்து வந்த ஈரோடு தீயணைப்பு துறையினர் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அணைக்காமல் விட்ட பீடி அல்லது சிகரெட் துண்டுகளால் தீப்பிடித்து இருக்கலாம் என கருதப்படுகிறது. பகலில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post அடர்ந்த வனப்பகுதியில் தீ விபத்து appeared first on Dinakaran.
