- அண்ணா நினைவு தினம்
- எடப்பாடி
- சென்னை
- அஇஅதிமுக
- பொது
- எடப்பாடி பழனிசாமி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தின மலர்
சென்னை: அண்ணா நினைவுநாளையொட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் தாரக மந்திரத்தை அரசியல் உலகிற்கு அறிமுகம் செய்து வைத்த சுயமரியாதை சுடரொளி, தமிழ்நாட்டை தலைநிமிர வைத்த தமிழ்த் தாயின் தவப்புதல்வர்; அரசியல் பகைவரும் அண்ணாந்து வியக்கும்படி அறிவாற்றல் சிகரமென அதிசயமாய் உயர்ந்த, நம் இயக்கத்தின் கொள்கைச் சுடர் பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் நினைவு நாளில், அவர்தம் உயரிய கொள்கைகளை பின்பற்றி அவர் காட்டிய அறவழியில் பயணிக்க உறுதியேற்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post அண்ணா நினைவுநாள் எடப்பாடி டிவிட் appeared first on Dinakaran.
