×
Saravana Stores

சிவகார்த்திகேயன் படத்துக்கு காஷ்மீரில் அனுமதி மறுப்பு

சென்னை: சிவகார்த்திகேயன் நடிக்கும் படப்பிடிப்புக்கு காஷ்மீரில் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிக்கும் படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இவர் கவுதம் கார்த்திக் நடித்த ரங்கூன் படத்தை இயக்கியவர். இந்த படத்தில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடிக்கிறார். படத்தின் முக்கிய காட்சிகளை காஷ்மீரில் படமாக்க படக்குழு சில நாட்களுக்கு முன் காஷ்மீருக்கு சென்றது. முதல் கட்ட படப்பிடிப்பு 6 நாட்கள் அங்கு நடைபெற்றது.

அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக 25 நாட்கள் படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் காஷ்மீரில் படப்பிடிப்பை தொடர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. செப்டம்பரில் ஜி20 மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக பல்வேறு மாநிலங்களில் கலாசார விழாக்கள் நடைபெற உள்ளன. இதையொட்டி காஷ்மீரிலும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதால், பாதுகாப்பு காரணங்களுக்காக படப்பிடிப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் ஐதராபாத்தில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் செட் போட்டு படமாக்குவது குறித்து படக்குழு யோசித்து வருகிறது.

The post சிவகார்த்திகேயன் படத்துக்கு காஷ்மீரில் அனுமதி மறுப்பு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : kashmir ,Chennai ,sivakarthigayan ,sai pallavi ,rajkumar beryasamy ,Gautam Karthic ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED அமரன் திரைப்படத்துக்கு முழுமையான வரி...