×

ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் அய்யர் நீக்கம்

* ரஞ்சி கோப்பையில் ஜம்மு காஷ்மீருக்கு எதிரான 6வது சுற்று லீக் ஆட்டத்தில் மும்பை படுதோல்வியை சந்தித்தது. அதில் சுமாராக விளையாடிய ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ் அய்யர், யாஷ்வி ஜெய்ஸ்வால், ஷிவம் துபே என மேகலயாவுக்கு எதிரான ஆட்டத்தில் நீக்கப்பட்டு இருந்தனர். மற்றங்களுடன் களம் கண்ட ரகானே தலைமையிலான மும்பை அபாரமாக விளையாடி ரன் குவித்துள்ளது. கர்நாடகா அணிக்காக களமிறங்கிய நட்சத்திர வீரர் கே.எல்.ராகுல் 26, தேவதூத் படிக்கல் 43, மயாங்க் அகர்வால் 91ரன் எடுத்தனர். தமிழ்நாடு அணிக்கு எதிராக விளையாடும் ஜார்க்கண்ட் அணியின் கேப்டன் இஷா கிஷண் முதல் இன்னிங்சில் 8, 2வது இன்னிங்சில் 7ரன்னும் எடுத்துள்ளார்.

* சவுராஷ்டிரா அணிக்காக விளையாடிய இந்திய அணியின் பெருஞ்சுவர் புஜாரா ஒரு ரன்னில்(99) சதத்தை தவற விட்டார். ரவீந்திர ஜடேஜா 18ரன்னில் ஆட்டமிழந்தார்.

The post ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் அய்யர் நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Rohit Sharma ,Jaiswal ,Shreyas Iyer ,Mumbai ,Jammu ,Kashmir ,Ranji Trophy ,Yashvi Jaiswal ,Shivam Dubey ,Meghalaya ,Dinakaran ,
× RELATED வெ.இ.க்கு எதிரான 3வது டெஸ்டில்: வெற்றி...