×

தொழிலாளர் துணை ஆணையர் அலுவலகம் இடமாற்றம்

திருவள்ளூர், பிப்.1: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் எல்லைக்குட்பட்ட தொழிற்தகராறுகள் குறித்து நடவடிக்கை எடுக்கும் தொழிலாளர் துணை ஆணையர் (சமரசம்)-2 அலுவலகம் சென்னை -600108, குறளகம், 3ம் தளத்தில் இயங்கி வந்தது. தற்போது, இந்த அலுவலகம் சென்னை – 600001, ராஜாஜி சாலை, வாவு மேன்சன், 48/39, 7வது தளம் என்கிற முகவரிக்கு மாற்றம் செய்யப்படுகிறது. இந்த அவலுவலகம் புதிய விலாசத்திற்கு இடமாற்றம் செய்யப்படுவதால், பொதுமக்கள் இனிவரும் காலங்களில் மேற்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு சென்னை, தொழிலாளர் துணை ஆணையர் (சமரசம்)-2, வெற்றிச்செல்வி கேட்டுக் கொண்டுள்ளார்.

The post தொழிலாளர் துணை ஆணையர் அலுவலகம் இடமாற்றம் appeared first on Dinakaran.

Tags : Office Relocation ,Thiruvallur ,Deputy ,Thiruvallur District Collectorate ,Kuralakam, Chennai -600108 ,Rajaji ,Salai ,Chennai -600001… ,Labour Office Relocation ,Dinakaran ,
× RELATED திருநின்றவூர் நகராட்சியில் காலி...