×

கிருஷ்ணாபுரம் தொகுப்பு துணை மின்நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசரகால தொடர்பு: செல்போன் எண் அறிவிப்பு

பெரம்பலூர், ஜன.30: கிருஷ்ணாபுரம் தொகுப்பு துணை மின் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு புதிய நிரந்தர செல்போன் எண் பெற்றுள்ளதை பொது மக்கள் அவசரகால மின் தடைக்குத் தொடர்பு கொண்டு பயனடையலாம். இது தொடர்பாக உதவி செயற்பொறியாளர் மாணிக்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: பெரம்பலூர் மாவட்டம், கிருஷ்ணாபுரம் 110/22 கி.வா தொகுப்பு துணை மின் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு, புதிய நிரந்தர செல்போன் எண் 9445853004 பெறப் பட்டுள்ளது. மேலும், கிருஷ்ணாபுரம் துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகிக்கப்படும் ஊர்களான கிருஷ்ணாபுரம்,

வேப்பந்தட்டை, நெய் குப்பை, அன்னமங்கலம், அரசலூர், முகமதுபட்டினம், வெங்கலம், தழுதாழை, பாண்டப்பாடி, உடும்பியம், வெங்கனூர், பெரியம்மா பாளையம், பிள்ளையார் பாளையம், தொண்டப்பாடி, ஈச்சங்காடு, பூம்புகார், பாலையூர்,பெரிய வடகரை, வெண்பாவூர், தொண்ட மாந்துறை, விசுவக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் அவசர கால மின்தடைக்கு 9445853004 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என கிருஷ்ணாபுரம் தொகுப்பு துணைமின் நிலைய உதவி செயற்பொறியாளர் மாணிக்கம் வெளியிட் டுள்ள அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

The post கிருஷ்ணாபுரம் தொகுப்பு துணை மின்நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசரகால தொடர்பு: செல்போன் எண் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Krishnapuram ,Substation Control Room ,Perambalur ,Krishnapuram Substation Control Room ,Assistant Executive Engineer ,Manickam ,Perambalur… ,Dinakaran ,
× RELATED ராயபுரம் மண்டலத்தில் ரூ.1.26 கோடி...