×

ராதாபுரம் தொகுதியில் காங். மறு சீரமைப்பு கமிட்டி பணி கூட்டம்

திசையன்விளை, ஜன. 30: ராதாபுரம் தொகுதியில் பஞ்சாயத்து வாரியாக காங்கிரஸ் மறு சீரமைப்பு கமிட்டி பணி கூட்டம் நடந்தது. நெல்லை பாராளுமன்ற தொகுதி மறு சீரமைப்பு கமிட்டி அமைப்பாளர் ஆலங்குளம் செல்வராஜ் ஆலோசனையில் பேரில் இடையன்குடியில் மறு சீரமைப்பு பணி கூட்டம் நடந்தது. சிறப்பாக களப்பணி ஆற்றிய மாவட்ட செயலாளர் மருதூர் மணிமாறனை கமிட்டி மறு சீரமைப்பு அமைப்பாளர் விவேக் முருகன் பொன்னாடை அணிவித்து பாராட்டினார். நிகழ்ச்சியில் மாவட்ட துணை தலைவர் விஜயபெருமாள், முன்னாள் நகர தலைவர் ராஜன், செயலாளர் சங்கர், மாவட்ட செயலாளர் ஐசக், பொன்ராஜ், பணகுடி மாடசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post ராதாபுரம் தொகுதியில் காங். மறு சீரமைப்பு கமிட்டி பணி கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Congress ,Radhapuram constituency ,Reorganization Committee ,Vetiyaanvilai ,Congress Reorganization Committee ,Nellai Parliamentary Constituency Reorganization Committee ,Alankulam Selvaraj ,Idayangudi… ,Dinakaran ,
× RELATED 9 சட்டமன்ற தொகுதியிலும் 20, 21ம் தேதிகளில்...