×

அண்ணா நினைவு நாள் வரும் 3ம் தேதி நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி: அதிமுக அறிவிப்பு

சென்னை: அதிமுக தலைமைக் கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: அண்ணாவின் 56வது நினைவு நாளான 3.2.2025 (திங்கள்) காலை 10 மணிக்கு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்த உள்ளார். அதனைத் தொடர்ந்து, தலைமை கழகச் செயலாளர்கள் மலர் அஞ்சலி செலுத்த உள்ளனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள், கழக சார்பு அமைப்புகளின் மாநில துணை நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள் உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும் திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post அண்ணா நினைவு நாள் வரும் 3ம் தேதி நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி: அதிமுக அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : EDAPPADI PALANISAMI ,ANNA MEMORIAL DAY ,ATEMUGA ,Chennai ,Supreme Leader ,Anna ,56th Memorial Day ,General Secretary ,Chennai Marina ,Adimuga ,Dinakaran ,
× RELATED ‘முருகன்’ தொகுதி அலறும் ‘நாட்டாமை’