×

தாய்லாந்து பேட்மின்டன் தமிழகத்தின் சங்கர் முதல் சுற்றில் வெற்றி


பதும்வன்: இளவரசி வண்ணவாரி தாய்லாந்து மாஸ்டர்ஸ் பேட்மின்டன் போட்டி பதும்வான் நகரில் நடக்கிறது. அதில் நேற்று முதல் சுற்று ஆட்டங்கள் தொடர்ந்தன. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்தியா சார்பில் தமிழ்நாடு வீரர் சங்கர் முத்துசாமி, மலேசியா வீரர் செய்ம் ஜூன் வெய் மோதினர். அதில் சங்கர் முத்துசாமி 1 மணி 12 நிமிடங்கள் போராடி 15-21, 21-15, 21-19 என்ற செட்களில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீரர் கிடாம்பி காந்த் 21-13, 21-16 என நேர் செட்களில் இஸ்ரேல் வீரர் டானில் டுபோவென்கோவை வீழ்த்தினார். இந்த ஆட்டம் 36 நிமிடங்கள் நடந்தது. கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் கபூர்/ருத்விகா கட்டே இணை, தாய்லாந்தின் வீரபத் பக்ஜரங்/சாரத் சுவ்போகா இணையை 27 நிமிடங்களில் 21-8, 21-16 என்ற செட்களில் வீழ்த்தி 2வது சுற்றுக்குள் நுழைந்தனர்.

The post தாய்லாந்து பேட்மின்டன் தமிழகத்தின் சங்கர் முதல் சுற்றில் வெற்றி appeared first on Dinakaran.

Tags : Thailand ,Tamil Nadu ,Shankar ,Padumwan ,Princess ,Vannavari ,Thailand Masters badminton tournament ,Shankar Muthusamy ,Seym June ,India… ,Dinakaran ,
× RELATED சில்லிபாயிண்ட்…