×

டெல்லி தேர்தலில் பிரசாரம் செய்ய கலவர குற்றவாளிக்கு 6 நாள் பரோல்: உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: டெல்லியில் 2020ம் ஆண்டு நடந்த கலவர வழக்கில் அப்போது ஆம்ஆத்மி கவுன்சிலராக இருந்த தாகிர் உசேன் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் முஸ்தபாபாத் தொகுதியில் ஓவைசி கட்சியான ஏஐஎம்ஐஎம் கட்சி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். எனவே தேர்தலில் பிரசாரம் செய்ய ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அவரது மனுவை நீதிபதிகள் விக்ரம் நாத், சஞ்சய் கரோல், சந்தீப் மெக்தா அடங்கிய முழுஅமர்வு விசாரித்து இன்று முதல் பிப்.3 வரை 6 நாள் பரோல் வழங்கி உத்தரவிட்டது. மேலும் தாகிர் உசேன் தினமும் திகார் சிறையில் இருந்து காலை 6 மணிக்கு சென்று விட்டு மாலை 6 மணிக்கு திரும்பி வந்துவிட வேண்டும். தினமும் ரூ.2.47 லட்சம் பாதுகாப்புக்காக டெபாசிட் செய்ய வேண்டும். பிரசாரம் செய்யும்போது ஆயுத போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் ’ என்ற கட்டுப்பாடுகள் விதித்தனர்.

The post டெல்லி தேர்தலில் பிரசாரம் செய்ய கலவர குற்றவாளிக்கு 6 நாள் பரோல்: உச்ச நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Delhi elections ,Supreme Court ,New Delhi ,Tahir Hussain ,Aam Aadmi Party ,2020 Delhi riots ,Owaisi ,AIMIM ,Mustafabad ,Delhi Assembly ,Delhi ,Dinakaran ,
× RELATED கொல்கத்தாவில் பிரதமர் மோடியின்...