×

நல்லாடை கிராமத்தில் மயான பாதையை சீரமைக்க கோரிக்கை

தரங்கம்பாடி: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே நல்லாடை கிராமத்தில் உள்ள சுடுகாட்டு பாதையை சீர் செய்ய வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தரங்கம்பாடி அருகே நல்லாடை கிராமத்தில் மேலஅக்ரஹாரம் பகுதியில் சுடுகாடு உள்ளது. இது பொது சுடுகாடாக அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். ஆற்றங்கரை ஓரம் உள்ள இந்த சுடுகாட்டுக்கு 10 ஆண்டுகளுக்கு முன் சாலை வசதி செய்யப்பட்டது. அந்த சாலை இப்பொது மிகவும் சிதிலமடைந்து கற்கள் பெயர்ந்து நடக்க முடியாத நிலையில், இருப்பதால் பிரேதத்தை தூக்கி செல்பவர்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே அந்த சுடுகாட்டு பாதையை தார் சாலையாக மாற்றி சீர் செய்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post நல்லாடை கிராமத்தில் மயான பாதையை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Nalladai village ,Tarangambadi ,Mayiladuthurai District ,Tharangambadi ,Dinakaran ,
× RELATED மயிலாடுதுறை மாவட்டத்தில் சந்தை...