×

கடலூர் மாவட்ட ஜமாத்துல் உலமா சபையின் பொதுக்குழு கூட்டம்

வடலூர்: கடலூர் மாவட்ட ஜமாத்துல் உலமா சபையின் பொதுக்குழு கூட்டம் வடலூர் நூர் ஜும் ஆ பள்ளிவாசலில் நேற்று நடந்தது. கடலூர் மாவட்ட ஜமாத்துல் உலமா சபையின் தலைவர் மெளலானா முஹம்மது அலி ஹஜ்ரத் தலைமை தாங்கினார்.

மாவட்ட செயலாளர் மெளலானா அப்துல் சலாம் ஹஜ்ரத் வரவேற்றார். லால்பேட்டை மன்பவுல் அன்வர், அரபிக்கல்லூரி முதல்வர் அரசு மாவட்ட காஜி மெளலானா மவ்லவி நூருல் அமீன் ஹஜ்ரத் மற்றும் பொருளாாளர் வஜிஹூல்லா ஹஜ்ரத், மெளலானா சபியுல்லா ஹஜ்ரத் ஆகியோர்கள் முன்னிலை வகித்தார்கள். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை வடலூர் மஸ்ஜிதே நூர் ஜும்ஆ பள்ளிவாசலின் தலைவர் பக்ருதீன் செய்திருந்தார்.

கூட்டத்தில் 25 ஆண்டிற்கும் மேலாக பொது சேவையில் பணியாற்றி 20 உலமாக்களுக்கு மரியாதை செய்து சங்கை செய்யப்பட்டது. தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு வேலை வாய்ப்பு 7சதவீதமாக மாநில அரசு வழங்க வேண்டும் ஒன்றிய,மாநில அரசு நாட்டின் நலன் கருதி பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த கூடாது,வக்ஃப் திருத்த சட்ட மசோதாவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்,நாட்டில் நிலவி வரும் போதை பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் மாவட்ட, வட்டார நிர்வாகிகள் மற்றும் உலமாக்கள், வடலூர் பள்ளிவாசலின் நிர்வாகிகள் முத்தவல்லி ஹாஜி ஜமால் மொய்தீன், செயலாளர் ஹாஜி செய்யது அபுதாஹிர் பொருளாாளர் பஷிர் அஹமது வடலூர் மஸ்ஜிதே சேவைக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஜமாத்தார்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

The post கடலூர் மாவட்ட ஜமாத்துல் உலமா சபையின் பொதுக்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Cuddalore District Jamaatul Ulama Sabha General Committee Meeting ,Vadalur ,Vadalur Noor Jum A Masjid ,President ,Cuddalore District Jamaatul Ulama Sabha ,Maulana Muhammad Ali Hazrat ,District Secretary ,Maulana… ,Cuddalore ,District ,Jamaatul Ulama Sabha General Committee Meeting ,Dinakaran ,
× RELATED கடல் நம்மை பிரித்தாலும் மொழியும்,...