×

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு

பெங்களூரு: இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் சேனாபதி க்ரிஸ் கோபாலகிருஷ்ணன் மீது SC, ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது. 2014ல் இந்திய அறிவியல் நிறுவன வாரிய உறுப்பினராக கோபாலகிருஷ்ணன் இருந்தபோது பொய் குற்றச்சாட்டுகளை கூறி தான் பணி நீக்கம் செய்யப்பட்டு, சாதி ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக துர்கப்பா என்பவர் புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.

The post இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Bangalore ,Infosys ,Bengaluru ,Infosis ,Senaphat Kris Gopalakrishnan ,Bangalore Police ,Gopalakrishnan ,Indian Institute of Science ,Dinakaran ,
× RELATED இரண்டு வயது சிறுமி கொடூர கொலை வழக்கு;...