×

சேவல் கட்டுக்கு நீதிமன்றம் தடை: விற்பனைக்கு வரும் சண்டை சேவல்கள்

கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தாலுகாவில் கோவிலூர், பூலாம்வலசு, மணல்மேடு மற்றும் தோகைமலை, குளித்தலை, சின்னதாராபுரம் உள்பட பல்வேறு கிராமங்களில் வருடந்தோறும்  பொங்கலையொட்டி 3 நாட்கள் சேவல் கட்டு எனப்படும் சேவல் சண்டை நடைபெறும். இதில் அரவக்குறிச்சி அருகே பூலாம் வலசு கிராமத்தில் நடைபெறும் சேவல்கட்டு மிகவும் பிரபலமானது. இந்த கிராமத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக சேவல் சண்டை நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் ஜனவரி 13, 14, 15 ஆகிய 3 நாட்கள் நடக்கும் சேவல் சண்டையில் வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்தும் தினமும் 10,000 சண்டை சேவல்கள், உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என 5ஆயிரம் பேர் பங்கேற்பர். 3 நாட்களும் சேவல்கட்டு களைகட்டும். சில ஆண்டுகளுக்கு முன் சண்டை போடும் கோழியின் கால்களில் கத்தி கட்டி விஷம் தடவி போட்டி நடத்தியதாக புகார் வந்தது. இதில் ஏற்பட்ட பிரச்னையில் பூலாம் வலசு சேவல் சண்டைக்கு தடை விதிக்கப்பட்டது. அதன்பின்னர் நீதிமன்றம் தலையிட்டு சில நிபந்தனைகளுடன் சேவல் சண்டை நடத்தப்பட்டு வருகிறது.இந்தாண்டு கொரோனா, டெல்டா, ஒமிக்ரான் பரவல், இரவு நேர ஊரடங்கு என்று கட்டுப்பாடுகள் அதிகமாக உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ஐகோர்ட கிளையில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு மீது நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், தமிழக அரசு பதில் மனுத்தாக்கல் செய்யும் வரை சேவல் சண்டைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று உத்தரவிட்டனர்.இதனால் கரூர் மாவட்டத்தில் பூலாம் வலசு உள்பட எந்த கிராமங்களிலும் சேவல் சண்டைக்கான ஆயத்த பணிகள் நடக்கவில்லை. சேவல் சண்டைக்கு தடையால் கரூர் மாவட்டத்தை சேர்ந்த சண்டை சேவல் வளர்ப்பவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் வளர்க்கப்படும் சண்டை சேவல்களை உரிமையாளர்கள் விற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. அரவக்குறிச்சி, சின்னதாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வளர்க்கப்படும் சண்டை சேவல்கள் விலைக்கு வாங்கப்பட்டு சென்னையில் இடைதரகர்கள் மூலம் பெறப்பட்டு ரயில்கள் வழியாக ஆந்திரா மாநிலத்துக்கு அனுப்பப்பட்டு வருகிறது.சண்ைட சேவல்களை வளர்ப்போர் பெரும்பாலும் அதனை விற்பனை செய்யமாட்டார்கள். இந்த சேவல்கள் குறைந்தது 4 முதல் 6 கிலோ எடை இருக்கும். தற்போது சேவல் சண்டைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் சிலர் சேவல்களை விற்பனை செய்கின்றனர். அவர்களிடம் கிலோ ரூ.400 வரை கொடுத்து வாங்கி, காற்றோட்டமாக அட்டை பெட்டியில் வைத்து பேக்கிங் செய்து ஆந்திரா மாநிலத்துக்கு அனுப்புவதாக கரூரில் சேவல்களை வாங்கி விற்போர் கூறினர்….

The post சேவல் கட்டுக்கு நீதிமன்றம் தடை: விற்பனைக்கு வரும் சண்டை சேவல்கள் appeared first on Dinakaran.

Tags : Karur ,Aravakurichi Taluka ,Kowilur ,Poolamwalasu ,Sandmedu ,Thokaimalai ,Bhatalai ,Sinnatarapuram ,Bound Court ,
× RELATED கரூர் சுங்ககேட் அருகே அடையாளம் தெரியாத நபர் மயங்கி விழுந்து சாவு