×

போலி நகைகளை அடகு வைத்து ரூ.23 லட்சம் கடன் பெற்றதாக வங்கி நிர்வாகம் நோட்டீஸ்: பேங்க் பக்கமே வராத தொழிலாளி அதிர்ச்சி

சிவகாசி: வங்கி பக்கமே வராத கட்டிட தொழிலாளி, போலி நகைகளை அடமானம் வைத்து ₹23 லட்சம் கடன் பெற்றதாக வங்கி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது சிவகாசியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே சிவகாமிபுரம் காலனியை சேர்ந்தவர் செல்வம் (33). கட்டிட தொழிலாளி. மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இவர் போலி நகைகளை கொடுத்து ₹22 லட்சத்து 90 ஆயிரம் கடன் பெற்றதாகவும், பணத்தை உடனடியாக திரும்ப கட்ட வேண்டும் என்றும், சிவகாசி பஸ் ஸ்டாண்ட் அருகே இயங்கி வரும் அரசுடைமை வங்கியில் இருந்து நோட்டீஸ் வந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த செல்வம், வங்கியில் சென்று விளக்கம் கேட்டார். அதற்கு வங்கி அலுவலர்கள், ‘நீங்கள் போலி நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுள்ளீர்கள். பணத்தை உடனே திரும்ப செலுத்துங்கள்’ என்று எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து செல்வம் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘வங்கி பக்கமே போகாத எங்கள் குடும்பத்திற்கு இப்படி ஒரு சோதனையா? அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தும் நான், போலியான நகையை வைத்து எந்த பணத்தையும் பெறவில்லை. கடந்த மார்ச் மாதம் இதே வங்கியில் 56 நபர்களின் பெயர்களில் போலியான நகைகளை அடமானம் வைத்து ₹7.55 கோடி மோசடி செய்ததாக நகை மதிப்பீட்டாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் நான் பாதிக்கப்பட்டேனா என்று தெரியவில்லை. காவல்துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நியாயம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்’’ என்றார்.

The post போலி நகைகளை அடகு வைத்து ரூ.23 லட்சம் கடன் பெற்றதாக வங்கி நிர்வாகம் நோட்டீஸ்: பேங்க் பக்கமே வராத தொழிலாளி அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Selvam ,Sivagamipuram Colony ,Sivakasi, Virudhunagar District.… ,Dinakaran ,
× RELATED சிவகாசியில் விதிமீறி இயங்கிய பட்டாசு...