- தமிழ்நாடு
- அமைச்சர்
- சிவ சங்கர்
- எடபடதி
- சென்னை
- சிவசங்கர்
- எடப்பாடி பழனிசாமி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தமிழ் போக்குவரத்து அமைச்சர்
- சிவசாங்கர்
- சென்னை பெரம்பூர்
- Edapadi
சென்னை: தமிழ்நாட்டு மக்கள் ஒருநாளும் அதிமுக ‘சார்’களை மறக்க மாட்டார்கள் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி கொடுத்துள்ளார். தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: சென்னை பெரம்பூரை சேர்ந்த பள்ளி சிறுமி தனது தோழியின் இல்ல விழாவிற்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை என்ற புகாரின் அடிப்படையில் உடனடியாக வழக்கு பதிந்து தேடுதல் வேட்டையை துரிதப்படுத்தினர் காவல்துறையினர். மாணவியின் செல்போன் எண்ணை ஆய்வு செய்து அவரின் இருப்பிடத்தை கண்டறிந்த காவல்துறையினர் அங்கு சென்று சிறுமியை மீட்டுள்ளனர்.
மேலும் அவரோடு இருந்த இரண்டு பள்ளி சிறுமிகளையும் மீட்டுள்ளனர். மூன்று சிறுமிகளையும் காதலிப்பதாக கூறி அழைத்து சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்தியது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து குற்றவாளிகள் அனைவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர் காவல்துறையினர். விரைவாக நடவடிக்கை எடுத்துவிட்டார்களே என்ற விரக்தியில் எடப்பாடி பழனிசாமி வழக்கம் போல அரசை குறை கூறி அவதூறு பதிவு போட்டுள்ளார். ‘சார்’களை காப்பாற்றுவதில் கைதேர்ந்தவரான பழனிசாமிக்கு அதிமுகவின் ‘சார்’களை நினைவிருக்கிறதா? அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுகவை சேர்ந்த 103-வது வட்டச்செயலாளர் சுதாகர் சார் யார் என மறந்து விட்டீரா பழனிசாமி?
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுகவின் பொள்ளாச்சி நகர மாணவரணிச் செயலாளர் அருளானந்தம் சார் யார் என்பதை மறந்துபோனீரா? மனு கொடுக்க வந்த பெண்ணுக்கு குழந்தையை கொடுத்த மந்திரி சார் யார் என்பது பழனிசாமிக்கு தெரியாதா? நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரில் கைதானாரே அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சார் யார் என்பது மறந்து போனதா? நீங்கள் மறந்தது போல நடித்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஒருநாளும் அதிமுக சார்களை மறக்க மாட்டார்கள். தமிழக அரசு, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்து வருகிறது. பெண்கள் பாதுகாப்பில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது தமிழ்நாடு. இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டு மக்கள் ஒருநாளும் அதிமுக ‘சார்’களை மறக்க மாட்டார்கள்: எடப்பாடிக்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி appeared first on Dinakaran.
