×

மீனவர்கள் முற்றுகை

திருவொற்றியூர்: காசிமேட்டில் கடந்த வாரம் உணவு பாதுகாப்பு அதிகாரி சதீஷ் குமார் தலைமையில் அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு, அங்கு விற்பனைக்கு வைத்திருந்த கெட்டுப்போன மீன்களை கைப்பற்றி அழித்தனர்.

இந்நிலையில், ஒரு சிலர் செய்த தவறால், அனைத்து மீனவர்களும் கெட்டுப்போன மீன்களை விற்பதாக நினைத்து, பொதுமக்கள் இங்கு மீன்கள் வாங்க வராததால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி, மீன் வியாபாரிகள் 300க்கும் மேற்பட்டோர் நேற்று மீன்வளத் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர், ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இதுதொடர்பாக முறையிட்டனர்.

The post மீனவர்கள் முற்றுகை appeared first on Dinakaran.

Tags : Siege of ,Satish Kumar ,Kasimat ,Siege ,
× RELATED ஆவடியில் ரயில் மோதி ஒருவர் பலி