- சென்னை 1930 விழிப்புணர்வு
- மெரினா கடற்கரை சாலை
- சென்னை
- வியட்நாம்
- லாவோஸ்
- கம்போடியா
- மியான்மர்
- 1930 விழிப்புணர்வு மே
சென்னை: டிஜிட்டல் யுகத்தில், இணையம் ஒரு வரமாகவும், சாபமாகவும் மாறிவிட்டது. இணைய வழிக் குற்றங்கள் எல்லைகளைக் கடந்து நடக்கிறது. இன்று நடைபெறும் சைபர் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் பெரும்பாலும் வியட்நாம், லாவோஸ், கம்போடியா, மியான்மர் போன்ற நாடுகளிலிருந்து செயல்படுகிறார்கள். இவர்களை அடையாளம் காண்பது மிகவும் சவாலான விஷயம் ஆகும். சமீபகாலமாக, சைபர் குற்றங்கள் வேகமாக அதிகரித்து வருவதாலும் புகாரளிப்பதில் தாமதம் ஏற்படுவதாலும் அதிக நிதி இழப்புகள் ஏற்படுகின்றன.
சைபர் ‘நிதி குற்றங்களைப் பொறுத்தவரை உயிர் காப்பு எண் ஆனது உதவி எண் 1930’ ஆகும். எனவே, இது ரீதியாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகவும் அவசியம். எனவே, தமிழ்நாட்டின் இணைய வழிக் குற்றப் பிரிவு, சேப்பாக்கம் ஸ்டேடியம்/வாலாஜா சாலையில் (மாநில விருந்தினர் மாளிகையின் முன்) இருந்து பிரஸ் கிளப் சாலை (1930 மீட்டர்) வழியாக சுவாமி சிவானந்தா சாலையில் உள்ள ஆடம்ஸ் பாயிண்ட் வரை 29 ஜனவரி 2025 அன்று மாலை 04:00 மணிக்கு 1930 நடைப்பயணத்தை ஏற்பாடு செய்திருக்கிறது.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 1930 நடைப்பயணத்தை அரசு, உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார் கொடியசைத்து துவக்கி வைப்பார். மேலும் இந்நிகழ்ச்சி காவல்துறை தலைமை இயக்குநர் /காவல்துறை படைத்தலைவர் சங்கர் ஜிவால் தலைமையில், இணைய வழிக் குற்றப் பிரிவு கூடுதல் இயக்குநர் டாக்டர். சந்தீப் மிட்டல் முன்னிலையில் நடைபெறும். இந்த நடைப்பயண துவக்க நிகழ்ச்சியில் பல நிகழ்வுகள் நடைபெற இருக்கின்றன.
இதில், சமீபத்திய நாட்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 30 பிரபலமான சைபர் குற்றங்கள் குறித்த கார்ட்டூன் தொடர் “சைபர் குற்றங்களும் தம்பியின் வழிகாட்டலும்” என்ற தலைப்பில் வெளியிடப்படும்; மேலும் விரிவாக்கப்பட்ட 1930 சைபர் குற்றக் கட்டுப்பாட்டு அறையின் தொடக்க விழாவும்; விழிப்புணர்வு குறும்படங்களை வெளியிடுதலும் மற்றும் பிரபலங்கள் நடித்த விழிப்புணர்வு திரைப்படத்தை வெளியிடுதல் போன்ற பல நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. 1930 நடைப்பயணத்தில் பள்ளிகள், கல்லூரிகள், பொது மக்கள் போன்ற அனைத்து தரப்புகளிலும் இருந்து சுமார் 5000 பேர் பங்கேற்க உள்ளனர்.
சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை ஊக்குவிப்பதுடன் சைபர் விழிப்புணர்வையும் ஏற்படுத்த இந்த நிகழ்ச்சி உந்துகிறது. நடைபயண பாதை முழுவதும் நீர் நிலையங்கள் அமைக்கப்படும், அத்துடன் அவசரகால உதவிக்காக முக்கிய இடங்களில் ஆம்புலன்ஸ் சேவையும் பயண முடிவில் ப்ளாக் செயின் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
ஆர்வமுள்ளவர்கள், முன்கூட்டியே பதிவு செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள், பதிவு செய்ய, https://1930walkathon.in ஐப் பார்வையிடவும். மேலும், அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் விரிவான செய்திகளை வழங்கி இந்த நிகழ்வை பிரபலப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
The post ஜன.29ல் மெரினா கடற்கரை சாலையில் சென்னை 1930 விழிப்புணர்வு நடைபயணம் appeared first on Dinakaran.
