×

ஜகபர் அலி கொலை வழக்கு: 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டம்

புதுக்கோட்டை: சமூக ஆர்வலர் ஜகபர் அலி கொலை வழக்கில் சிறையிலடைக்கப்பட்ட 5பேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜகபர்அலி(58). இவர் சட்டவிரோத கனிம வளக் கொள்ளைக்கு எதிராக பல்வேறு கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த 17ம் தேதி அன்று குவாரி உரிமையாளர்களால் லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் குவாரி உரிமையாளர்கள் ராசு, ராமையா, ராசுவின் மகன் தினேஷ்குமார், லாரி உரிமையாளர் முருகானந்தம். லாரி ஓட்டுநர் காசிநாதன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை புதுக்கோட்டை ஏடிஎஸ்பி முரளிதரன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், கடந்த 22ம் தேதி சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த வழக்கில் கோப்புகள் காவல்துறையிடமிருந்து சிபிசிஐடி போலீசாருக்கு ஒப்படைக்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வெங்களூர் கிராமத்தில் உள்ள ஜகபர்அலியின் இல்லத்திலிருந்து சிபிசிஐடி போலீஸ் டிஎஸ்பி இளங்கோ ஜென்னிங்ஸ் தலைமையில் முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். குறிப்பாக ஜகபர் அலி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது மனைவி மரியம் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில் அவரிடம் விசாரணையை தொடங்கினர்.

மேலும் இதில் யார் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, காவல்துறையினர், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு உள்ளதா? என்ன நோக்கத்திற்காக அவர் கொலை செய்யப்பட்டார்? என விசாரணை நடத்த சிறையில் அடைக்கப்பட்ட 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

The post ஜகபர் அலி கொலை வழக்கு: 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டம் appeared first on Dinakaran.

Tags : Jagbar ,CBCID ,Pudukkottai ,Jagbar Ali ,Vengaloor ,Thirumayam ,
× RELATED ஊர்க்காவல் படைக்காக தேர்வான 50...