×

முன்புறம் தோட்டம் அமைப்பதற்காக ஜாக்கி மூலம் பின்னோக்கி நகர்த்தப்பட்ட விவசாயி வீடு

 

திருத்தணி, ஜன.26: பள்ளிப்பட்டு அருகே, வடகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. விவசாயியான இவர், இக்கிராமத்தில் 15 ஆண்டுகளுக்கு முன்பு தளம்போட்ட வீடு கட்டி குடியிருந்து வருகிறார். இந்நிலையில், வீட்டின் முகப்பு பகுதியில் தோட்டம் அமைக்க வேண்டும் என்று அவர் முடிவு செய்தார். இதற்காக, பொறியாளர் ஆரி கேசவுலு என்பவரின் உதவியுடன் வீட்டை ஜாக்கி வைத்து பின்னோக்கி நகர்த்த அவர் முடிவு செய்தார். பின்னர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 5 பேர் வரவழைக்கப்பட்டனர்.

வீட்டின் அஸ்திவாரத்தை தோண்டி மணல் எடுத்து வீட்டின் பின் பகுதியில் உள்ள காலி மனைக்கு வீட்டை நகர்த்துவதற்காக ரோலர் ஜாக்கி பொருத்தி பின்னுக்கு நகர்த்தும் பணியில் கடந்த 25 நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். அறிவியல் அசுர வளர்ச்சி அடைந்துள்ள காலகட்டத்தில் நகர்ப்புறங்களில், வீடுகள், கட்டிடங்களை அப்படியே தூக்கி வேறு ஒரு இடத்திற்கு மாற்றம் செய்யும் தொழில்நுட்பம் வந்து விட்டது.

ஆனால், கிராம பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வீடுகளை அப்படியே வேறு இடத்திற்கு நகர்த்துவது என்பது புதுமையாக தெரிகிறது.  இதனால், விவசாயி தனது வீட்டை நகர்த்தும் முறையை பார்க்க அக்கிராம மக்கள் ஆர்வம் காட்டி, விவசாயியின் வீட்டின் முன்பு குவிந்துள்ளனர்.

The post முன்புறம் தோட்டம் அமைப்பதற்காக ஜாக்கி மூலம் பின்னோக்கி நகர்த்தப்பட்ட விவசாயி வீடு appeared first on Dinakaran.

Tags : Tiruttani ,Subramani ,Vadakuppam ,Pallipattu ,Dinakaran ,
× RELATED திருநின்றவூர் நகராட்சியில் காலி...