×

சீமானை இந்நேரம் கைது செய்திருக்க வேண்டும்: செல்லூர் ராஜூ கொதிப்பு

மதுரை: மதுரையில் அதிமுக மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தந்தை பெரியாரை இழிவாக பேசிய சீமான் குறித்து நானும் டிவிட்டரில் பதிவு போட்டுள்ளேன். எங்கள் கட்சி ஜெயக்குமாரும் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு மேல் என்ன செய்வது? இந்நேரம் சீமானை கைது செய்து சிறையில் அடைத்திருக்க வேண்டும். தந்தை பெரியார் உருவாக்கிய திராவிடர் கழகத்தினர் அரசுக்கு அழுத்தம் கொடுத்து சீமானை கைது செய்ய வைத்திருக்க வேண்டும்’’ என்றார்.

The post சீமானை இந்நேரம் கைது செய்திருக்க வேண்டும்: செல்லூர் ராஜூ கொதிப்பு appeared first on Dinakaran.

Tags : Seeman ,Sellur Raju ,Madurai ,Former ,AIADMK ,minister ,Periyar ,Jayakumar ,
× RELATED இது தகவல்கள் எளிதாக கிடைக்கும் காலம்:...