×

ஜூலை மாதம் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ஜெயிலர். அனிரூத் இசையமைக்கிறார். இதில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப், சுனில், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 10 அன்று வெளியாகும் என்று அறிவித்தனர். தற்போது படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது, அதன்படி இந்த படத்தின் இசையை பிரமாண்டமாக வருகின்ற ஜூலை மாதத்தில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதற்கு முன்பு வருகின்ற ஜூன் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகும் என கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.

The post ஜூலை மாதம் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : rajinikanth ,nelson thilipkumar ,Aniruth ,Mohanlal ,Shivraj Kumar ,Jackie Sherab ,Sunil ,Thamanna ,Ramya Krishnan ,Jailor Film Music Launch Festival ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED வெற்றி துரைசாமி மறைவுக்கு சைதை...