×

49வது சுற்றுலா பொருட்காட்சி தீவுத்திடலுக்கு 1.46 லட்சம் பார்வையாளர்கள் வருகை: அமைச்சர் ஆய்வு


சென்னை: சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் 49வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை பொதுமக்கள் அறியும் வகையில் அரசு துறைகளின் 43 அரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பொருட்காட்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பொதுமக்களுடன் கலந்துரையாடினார். கடந்த 21ம் தேதி வரை இப்பொருட்காட்சியினை 1,20,253 பெரியவர்கள் மற்றும் 26,124 குழந்தைகள் என மொத்தம் 1,46,377 நபர்கள் பார்வையிட்டுள்ளனர்.

இப்பொருட்காட்சியில் 110 சிறிய கடைகள் மற்றும் 30 தனியார் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் ஆவின் பால்கோவா, ஆவின் ஐஸ்கிரீம் உள்பட பல்வேறு திண்பண்டங்கள் பொருட்காட்சியில் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், 80,000 சதுர அடி பரப்பளவில் பொழுதுபோக்கு வளாகம் அமைக்கப்பட்டு அதில் 30க்கும் மேற்பட்ட ராட்சத சாகச விளையாட்டு சாதனங்கள், சிறுவர் விளையாட்டு சாதனங்கள் மற்றும் நவீன கேளிக்கை சாதனங்கள் மக்களை ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

சிறுவர் ரயில், பனிக்கட்டி உலகம், அவதார் உலகம், மென் காட்சியகம், மிரளவைக்கும் பேய் வீடு, 3டி தியேட்டர், அறிவியல் உலகம் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை அலுவலக நாட்களில் மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

The post 49வது சுற்றுலா பொருட்காட்சி தீவுத்திடலுக்கு 1.46 லட்சம் பார்வையாளர்கள் வருகை: அமைச்சர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : 49th Tourism Expo Island ,Chennai ,Tamil Nadu government ,49th India Tourism and Industry Expo ,Chennai Island ,Tourism Minister ,Rajendran ,49th Tourism Expo ,Island ,
× RELATED மாவட்ட கலெக்டர் தலைமையில் பழங்குடியின மக்களுடன் சமத்துவ பொங்கல் விழா