×

மங்களூரு கூட்டுறவு வங்கி கொள்ளை வழக்கில் இருவர் அம்பை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்

நெல்லை: கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே கூட்டுறவு சங்க வங்கியில் கடந்த 17ம் தேதி முகமூடி அணிந்து சென்ற மர்ம கும்பல் அங்குள்ளவர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டி பல கோடி மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து மங்களூரு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கேரள மாநிலம் வழியாக தமிழகம் வந்ததாக முதற்க்ட்ட விசாரணையில் தெரியவந்தது. பின்னர் நெல்லை மாவட்டத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது.

மங்களூரு காவல் ஆய்வாளர் ராஜேந்திர பிரசாத் தலைமையிலான தனிப்படை போலீசார் இன்று நெல்லையில் மங்களூரு கூட்டுறவு சங்க வங்கியில் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக முருகாண்டி, ஜோஷ்வா ஆகியோரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை இன்று மாலை அம்பை குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்பு ஆஜர்படுத்தினர். இது தொடர்பாக நீதிபதிகளிடம் விளக்கமளித்த பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

The post மங்களூரு கூட்டுறவு வங்கி கொள்ளை வழக்கில் இருவர் அம்பை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Amba criminal court ,Mangalore Cooperative Bank ,Nellai ,Cooperative Bank ,Mangalore, Karnataka ,Dinakaran ,
× RELATED காவிரி குறுக்கே மேகதாது அணை கட்ட தமிழக...