×

தனுஷ் படத்தை இயக்கும் நெல்சன்

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற படங்களை அடுத்து தற்போது ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தை இயக்கி வருகிறார் நெல்சன். ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார், தமன்னா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஜெயிலர் படத்திற்கு பின் தனுஷ் நடிக்கும் படத்தை நெல்சன் இயக்கயிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வரும் தனுஷ், அதையடுத்து ஒரு படத்தை இயக்க இருப்பவர், அந்த படத்தை முடித்ததும் நெல்சன் இயக்கும் படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. ரஜினியின் ஜெயிலர் படம் திரைக்கு வந்த பிறகு தனுஷை வைத்து நெல்சன் இயக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளதாம்.

The post தனுஷ் படத்தை இயக்கும் நெல்சன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : nelson ,danush Nelson ,Rajini ,Kolamavu Gokila ,Ramya Krishnan ,Shivraj Kumar ,Damanna ,Dannush ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகம் வந்த ரஜினியால் பரபரப்பு