×

இந்தியன் ஓபன் பேட்மின்டன் சிந்து, அனுபமா வெற்றி

புதுடெல்லி: இந்தியன் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் முதல் சுற்றுப் போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, தைவான் வீராங்கனை ஸங் ஸுவோ யுன் மோதினர். முதல் செட்டை எளிதில் கைப்பற்றிய சிந்து 2வது செட்டில் கடுமையாக போராட நேரிட்டது. இறுதியில் அதையும் கைப்பற்றிய சிந்து, 21-14, 22-20 என்ற நேர் செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார். 2வது சுற்றில், ஜப்பானின் மனமி மிசுட்சுவுடன் அவர் மோதுவார்.
நேற்று நடந்த ஒரு போட்டியில் இந்திய வீராங்கனை அனுபமா உபாத்யாயா, தமிழ்நாட்டின் கோயம்புத்துாரை சேர்ந்த ரக்‌ஷிதா ராம்ராஜ் உடன் மோதினார். இந்த போட்டியில் இருவரும் சளைக்காமல் போராடியபோதும், 21-17, 21-18 என்ற நேர் செட் கணக்கில் அனுபமா வென்று 2ம் சுற்றுக்கு முன்னேறினார்.

The post இந்தியன் ஓபன் பேட்மின்டன் சிந்து, அனுபமா வெற்றி appeared first on Dinakaran.

Tags : Indian Open Badminton Sindhu ,Anupama ,New Delhi ,B. V. Sung Xuo Yun ,Sindh ,Virangan ,SINDHU ,Dinakaran ,
× RELATED கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அலிஷா ஹீலி ஓய்வு