×

கீழ்வேளூரில் அனுமதியின்றி லாரியில் குடிநீர் எடுத்த நிறுவனத்திற்கு சீல்

 

கீழ்வேளூர்,ஜன.12: நாகை மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சி குருவிப்பாடி பகுதியில் உள்ள ஒரு இடத்தில் உரிய அனுமதியின்றி குடிநீர் எடுப்பதாக கீழ்வேளூர் தாசில்தாருக்கு புகார் வந்தது. புகாரின் பேரில் தாசில்தார் கவிதாஸ், வருவாய் ஆய்வாளர் அகிலா, கிராம நிர்வாக அலுவலர் ரவிந்திரபாண்டியன் ஆகியோர் அந்த இடத்தை ஆய்வு செய்தனர். மேலும் அந்த இடத்தில் அனுமதியின்றி லாரி மூலம் குடிநீர் எடுப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து தாசில்தார் முன்னிலையில் பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

The post கீழ்வேளூரில் அனுமதியின்றி லாரியில் குடிநீர் எடுத்த நிறுவனத்திற்கு சீல் appeared first on Dinakaran.

Tags : Kilvellur ,Kilvellur Tahsildar ,Kuruvippadi ,Kilvellur Town Panchayat ,Nagai district ,Tahsildar Kavitas ,Revenue Inspector ,Akila ,Administrative Officer ,Ravindrapandian… ,Dinakaran ,
× RELATED சிறுமிக்கு பாலியல் தொந்தரவு ெகாடுத்த...